X விதிகள்

பொது மக்களிடையே உரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே X-இன் நோக்கமாகும். வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பிற ஒத்த வகை நடத்தைகளால் பொதுமக்கள் தங்களை வெளிப்படுத்துவது தடைபட்டு, உலகளவில் பொதுவான உரையாடல்களில் ஈடுபடுவதும் குறையும். பொதுவான உரையாடல்களில் அனைவரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை எங்கள் விதிகள் உறுதிசெய்கின்றன.
 

பாதுகாப்பு

வன்முறையான பேச்சு: வன்முறை அல்லது தீங்கு விளைவிப்பதற்காக நீங்கள் அச்சுறுத்தவோ, தூண்டவோ, அதைப் புகழ்ந்து பேசவோ அல்லது வெளிப்படுத்தவோ கூடாது. மேலும் அறிய.

வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க உள்ளீடுகள்: வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க உள்ளீடுகளின் செயல்பாடுகளை நீங்கள் இணைக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது. மேலும் அறிய.

குழந்தைப் பாலியல் சுரண்டல்: X-இல் குழந்தைப் பாலியல் சுரண்டலைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் அறிய.

துஷ்பிரயோகம்/துன்புறுத்தல்: தவறான உள்ளடக்கத்தைப் பகிரவோ, ஒருவரை இலக்கு வைத்து துன்புறுத்துவதில் ஈடுபடவோ அல்லது பிறரை அவ்வாறு செய்யத் தூண்டவோ கூடாது. மேலும் அறிய.

வெறுக்கத்தக்க நடத்தை: இனம், இனக்குழு, தேசியத் தோற்றம், சாதி, பாலியல் நாட்டம், பாலினம், பாலின அடையாளம், மதச் சார்பு, வயது, இயலாமை அல்லது தீவிர நோய் ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் மற்றவர்களைத் தாக்கக்கூடாது. மேலும் அறிய

வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் குற்றவாளிகள்: பயங்கரவாத, வன்முறை தீவிரவாத அல்லது பெரிய வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் தனிப்பட்ட குற்றவாளிகளால் பராமரிக்கப்படும் எந்தவொரு கணக்குகளையும் நாங்கள் அகற்றுவோம், மேலும் அத்தகைய குற்றவாளிகளால் உருவாக்கப்பட்ட, அறிக்கைகளைப் பரப்பும் கீச்சுகளையும் அல்லது பிற உள்ளடக்கங்களையும் அகற்றுவோம். மேலும் அறிய

தற்கொலை: தற்கொலை அல்லது சுய தீங்கை நீங்கள் விளம்பரப்படுத்த அல்லது ஊக்குவிக்கக்கூடாது. மேலும் அறிய.

உணர்ச்சிப் பூர்வமான மீடியா: அதீத கோரமான மீடியாவை நீங்கள் இடுகையிடக்கூடாது அல்லது நேரலை வீடியோ அல்லது சுயவிவரம் அல்லது தலைப்பு படங்களில் வன்முறை அல்லது ஆபாச உள்ளடக்கத்தைப் பகிரக்கூடாது. பாலியல் வன்முறை மற்றும்/அல்லது தாக்குதலைச் சித்தரிக்கும் ஊடகமும் அனுமதிக்கப்படாது. மேலும் அறிய

சட்டவிரோத அல்லது சில ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள்: எந்தவொரு சட்டவிரோத நோக்கத்திற்காகவோ சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவோ எங்கள் சேவையை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. இதில் குறிப்பிட்ட வகை ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வது, வாங்குவது அல்லது பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும். மேலும் அறிய.

தனியுரிமை

 

தனிப்பட்ட தகவல்கள்: பிறரின் தனிப்பட்ட தகவலை (வீட்டு ஃபோன் எண் மற்றும் முகவரி போன்றவை) அவர்களின் வெளிப்படையான அங்கீகாரம் மற்றும் அனுமதியின்றி வெளியிடவோ இடுகையிடவோ கூடாது. தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதாக மிரட்டுவதையும் பிறரை அவ்வாறு செய்யத் தூண்டுவதையும் நாங்கள் தடைசெய்துள்ளோம். மேலும் அறிய.

ஒப்புதலற்ற நிர்வாணம்: ஒருவரின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட அவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நீங்கள் பதிவிடவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ கூடாது. மேலும் அறிய.

கணக்குத் திருடப்படுதல்: உங்களின் சொந்த X கணக்கை (அல்லது X-இன் டீம்ஸ் அங்கீகாரம், OAuth அங்கீகாரம் அல்லது அதுபோன்ற பொறிமுறையின் மூலம் உங்களால் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டவை) தவிர வேறு எந்த X கணக்கின் தனிப்பட்ட தகவலை அல்லது கணக்கு அம்சங்களை உள்நுழைவதற்கு, அணுகுவதற்கு, சேர்ப்பதற்கு, நீக்குவதற்கு அல்லது மாற்றுவதற்குச் சான்றிதழ்கள், கடவுச்சொற்கள், டோக்கன்கள், விசைகள், குக்கீகள் அல்லது பிற தரவைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது. மேலும் அறிய.

நம்பகத்தன்மை


இயங்குதளக் கையாளுதல் மற்றும் ஸ்பேம்:
X-இல் பொது மக்களின் அனுபவத்தை ஏமாற்றும் அல்லது குறுக்கிடும் வகையில் தகவலைச் செயற்கையாக அதிகரிக்கவோ அல்லது சுருக்கவோ அல்லது அத்தகைய நடத்தையில் ஈடுபடும் வகையில் X சேவைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் அறிய.

குடிமை நேர்மை: தேர்தல்கள் அல்லது பிற குடிமை செயல்முறைகளில் கையாளுதல் அல்லது தலையிடுவதற்கான நோக்கத்திற்காக நீங்கள் X-இன் சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது. இதில் குடிமை செயல்பாட்டில் எப்போது, எங்கே, அல்லது எப்படிப் பங்கேற்க வேண்டும் என்பது பற்றிப் பங்கேற்பை அடக்கக்கூடிய அல்லது மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கத்தை இடுகையிடுவதும் பகிர்வதும் அடங்கும். மேலும் அறிய.

தவறாக வழிநடத்தும் மற்றும் ஏமாற்றும் அடையாளங்கள்: மற்றவர்களைத் தவறாக வழிநடத்தவோ, குழப்பவோ அல்லது ஏமாற்றவோ தனிநபர்களாக, குழுக்களாக அல்லது நிறுவனங்களாக ஆள்மாறாட்டம் செய்யக்கூடாது அல்லது X-இல் மற்றவர்களின் அனுபவத்தைச் சீர்குலைக்கும் வகையில் போலி அடையாளத்தைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் அறிய.

போலியான மற்றும் கையாளப்பட்ட மீடியா: தீங்கு விளைவிக்கக் கூடிய போலியான அல்லது கையாளப்பட்ட மீடியாவை நீங்கள் ஏமாற்றும் விதமாகப் பகிரக்கூடாது. கூடுதலாக, போலியான மற்றும் கையாளப்பட்ட மீடியாக்களைக் கொண்ட கீச்சுகளை நாங்கள் பெயரிடலாம், இது பயனர்களுக்கு அவர்களின் நம்பகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் கூடுதல் உட்பொருளை வழங்கவும் உதவும். மேலும் அறிய.

பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை: பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை உள்ளிட்ட மற்றவர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை நீங்கள் மீறக்கூடாது. எங்கள் வணிகமுத்திரைக் கொள்கை மற்றும் பதிப்புரிமை கொள்கை பற்றி மேலும் அறியவும்.

வீடியோ உள்ளடக்கத்தில் மூன்றாம் தரப்பு விளம்பரம்


எங்கள் முன்னனுமதி இல்லாமல், முன்-இயக்க வீடியோ விளம்பரங்கள் அல்லது ஸ்பான்ஸர்ஷிப் கிராஃபிக்ஸ் போன்ற மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு வீடியோ உள்ளடக்கத்தையும் எங்கள் சேவைகளிலோ அல்லது அவற்றின் மூலமாகவோ நீங்கள் சமர்ப்பிக்க, இடுகையிட அல்லது காண்பிக்கக் கூடாது.


அமலாக்கம் மற்றும் முறையிடல்


இந்த விதிகளை மீறுவதால் அல்லது அமலாக்கத்தை மீற முயற்சிப்பதால் ஏற்படும் சாத்தியமான தொடர் விளைவுகள், எவ்வாறு முறையிடுவது உள்ளிட்ட  எங்கள் அமலாக்க நடைமுறையைப் பற்றி மேலும் அறியவும்.

இந்தக் கட்டுரையைப் பகிர்க