ஸ்பேஸை உருவாக்குபவர்தான் ஹோஸ்ட். iOS-இல் ஹோஸ்டாக, உங்கள் முகப்பு காலவரிசையிலிருந்து கீச்சு உருவாக்கி என்பதை நீண்ட நேரம் அழுத்தி, பின்னர் ஸ்பேசஸ் ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஸ்பேஸைத் தொடங்கலாம்.
உங்கள் காலவரிசையின் கீழே உள்ள ஸ்பேசஸ் தாவலைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் ஸ்பேஸைத் தொடங்கலாம்.
ஸ்பேசஸ் பொதுவானது, எனவே உங்களைப் பின்தொடராதவர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் கேட்போராகச் சேரலாம். ஸ்பேஸுக்கான இணைப்பை நேரடிச்செய்தி மூலமாகவோ, இணைப்பை ட்விட் செய்வதன் மூலமாகவோ அல்லது வேறு இடத்தில் பகிர்வதன் மூலமாகவோ, கேட்பவர்களை நேரடியாக ஸ்பேஸுக்கு அழைக்கலாம்.
13 நபர்கள் வரை (ஹோஸ்ட் மற்றும் 2 கோ-ஹோஸ்ட்கள் உட்பட), கொடுக்கப்பட எந்த நேரத்திலும் ஒரு ஸ்பேஸில் பேசலாம். ஒரு புதிய ஸ்பேஸை உருவாக்கும் போது, உங்கள் ஸ்பேஸுக்கு பெயரிடவும் மற்றும் உங்கள் ஸ்பேஸை தொடங்கவும் என்ற விருப்பத்தேர்வுகளைக் காண்பீர்கள்.
ஒரு ஸ்பேஸைத் திட்டமிடுவதற்கு, பின்னர் இயங்கும்படி திட்டமிடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்பேஸை நேரலை செய்ய விரும்பும் தேதி, நேரத்தைத் தேர்வு செய்யவும்.
ஸ்பேஸ் தொடங்கிய பின், நபர்கள் ஐகானை தேர்ந்தெடுத்து கோ-ஹோஸ்ட்கள் அல்லது பேசுபவர்களைச் சேர்ப்பதன் மூலமும் அல்லது ஸ்பேஸில் உள்ள நபரின் சுயவிவரப் படத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களை கோ-ஹோஸ்ட் அல்லது பேசுபவராகச் சேர்ப்பதன் மூலமும் ஹோஸ்ட் என்பவர் கேட்பவர்களை கோ-ஹோஸ்ட்கள் அல்லது பேசுபவர்கள் ஆகக்கோரும் கோரிக்கைகளை அனுப்பலாம். மைக்ரோஃபோனுக்குக் கீழே உள்ள கோரிக்கை ஐகானை தேர்ந்தெடுப்பதன் மூலம் கேட்பவர் ஹோஸ்டிடம் பேச அனுமதி கோரலாம்.
ஸ்பேஸை உருவாக்கும் போது, ஹோஸ்ட்டாக இருப்பவர் தனது மைக்கை ஆஃப் செய்து வைத்திருப்பார், மேலும், அவர் மட்டுமே ஸ்பேஸில் பேசுபவராக இருப்பார். தயாரானதும், உங்கள் ஸ்பேஸை தொடங்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பேசுபவர்களுக்கு மைக் அணுகலை (பேசும் இயல்பு) வழங்க, மைக் அணுகலை அனுமதி என்பதை ஆன் என மாற்றவும்.
Get started chatting in your Space.
As a host, make sure to Tweet out the link to your Space so other people can join. Select the icon to Share via a Tweet.