எவ்வாறு ட்விட் செய்வது

ஒரு கீச்சானது புகைப்படங்கள், GIFகள் வீடியோக்கள், இணைப்புகள் மற்றும் உரை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

ஒருவருக்கு எவ்வாறு ட்விட் செய்வது என்ற தகவலைத் தேடுகிறீர்களா? X -இல் பதில்கள் மற்றும் குறிப்பீடுகளை எவ்வாறு இடுகையிடுவது என்பது பற்றிய எங்கள் கட்டுரையைப் படிக்கவும்.

எவ்வாறு ட்விட் செய்வது
படி 1

கீச்சு எழுதுதல் ஐகானை  தொடவும்.

படி 2

உங்கள் செய்தியை (280 எழுத்துக்கள் வரை) எழுதி, ட்விட் செய் என்பதைத் தொடவும்.

படி 1

கீச்சு எழுதுதல் ஐகானை  தொடவும்

படி 2

உங்கள் செய்தியை (280 எழுத்துக்கள் வரை) உள்ளிட்டு, ட்விட் செய் என்பதைத் தொடவும்.

படி 3

உங்கள் சாதனத்தின் நிலைப் பட்டியில் ஓர் அறிவிப்பு தோன்றும், கீச்சு வெற்றிகரமாக அனுப்பப்பட்டதும் அது மறைந்துவிடும்.

படி 1

உங்கள் முகப்புக் காலவரிசையின் மேலே உள்ள எழுதுதல் பெட்டியில் உங்கள் கீச்சை (280 எழுத்துக்கள் வரை) உள்ளிடவும், அல்லது வழிசெலுத்தல் பட்டியில் உள்ள ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

படி 2

உங்கள் கீச்சில் 4 புகைப்படங்கள், ஒரு GIF அல்லது ஒரு வீடியோ வரை சேர்க்கலாம்.

படி 3

உங்கள் சுயவிவரத்தில் கீச்சை இடுகையிட ட்விட் செய் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

உங்கள் கீச்சின் வரைவைச் சேமிக்க, எழுதுதல் பெட்டியின் மேல் இடது மூலையில் உள்ள X ஐகானை கிளிக் செய்யவும், பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் கீச்சை பின்னர் வரும் தேதியில்/நேரத்தில் அனுப்ப திட்டமிட, எழுதுதல் பெட்டியின் கீழே உள்ள நாட்காட்டி ஐகானை கிளிக் செய்து உங்கள் அட்டவணை தேர்வுகளைச் செய்து, பின்னர் உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வரைவுகள் மற்றும் திட்டமிடப்பட்ட கீச்சுகளை அணுக, கீச்சு எழுதுதல் பெட்டிலிருந்து அனுப்பப்படாத கீச்சுகளைக் கிளிக் செய்யவும்.

 
கீச்சு மூல லேபிள்கள்

கீச்சு எவ்வாறு பதிவிடப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள, கீச்சு மூல லேபிள்கள் உங்களுக்கு உதவும். கீச்சையும் அதை எழுதியவரையும் பற்றிய சூழல் குறித்து இந்தக் கூடுதல் தகவல் தெரிவிக்கிறது. நீங்கள் மூலத்தை அடையாளம் காணாவிட்டால், உள்ளடக்கத்தை எந்த அளவு நம்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்க, நீங்கள் மேலும் அறிய வேண்டியிருக்கும்.

 

  1. கீச்சு விவரங்கள் பக்கத்திற்குச் செல்ல, ஒரு கீச்சில் கிளிக் செய்யவும்.
  2. கீச்சின் அடிப்புறத்தில், கணக்கின் கீச்சின் மூலத்திற்கான லேபிளைக் காண்பீர்கள். எடுத்துக்காட்டாக,iPhone -க்கான X, Android -க்கான X அல்லது இணையத்திற்கான X.
  3. விளம்பரதாரர்களுக்கான X என்ற லேபிளை கொண்டுள்ள கீச்சுகள், அவை X விளம்பரங்கள் உருவாக்குநர் மூலம் உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது, மேலும் அவை கட்டண உள்ளடக்கமா இல்லையா என்பதைக் குறிக்கவில்லை. கட்டண உள்ளடக்கம் அனைத்து விளம்பர வடிவங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்ட பேட்ஜைக் கொண்டுள்ளது.
  4. சில சந்தர்ப்பங்களில் நீங்கள் மூன்றாம் தரப்புக் கிளையண்ட் பெயரைப் பார்க்கக் கூடும், இது X அல்லாது ஒரு பயன்பாட்டிலிருந்து அந்தக் கீச்சு வந்தது என்பதைக் குறிக்கும். சில நேரங்களில் எழுதுபவர்கள் தங்கள் கீச்சுகளை நிர்வகிக்க, சந்தைப்படுத்த பிரச்சாரங்களை நிர்வகிக்க, விளம்பரப்படுத்தல் செயல்திறனை அளவிட, வாடிக்கையாளர் ஆதரவை வழங்க மற்றும் விளம்பரம் செய்வதற்காக குறித்த குழுக்களை இலக்கு வைக்க, மூன்றாம் தரப்புப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மூன்றாம் தரப்பு கிளையண்ட்டுகள் என்பவை எழுதுபவர்களால் பயன்படுத்தப்படும் மென்பொருள் கருவிகள், எனவே கீச்சு உள்ளடக்கத்துடன் அவை இணைந்திருக்காது அல்லது அவற்றின் பார்வையை அவை பிரதிபலிக்காது. கீச்சுகள் மற்றும் பிரச்சாரங்கள் நேரடியாக மனிதர்களால் உருவாக்கப்படலாம் அல்லது சில சூழ்நிலைகளில், ஒரு பயன்பாட்டின் மூலம் தானியங்காக உருவாக்கப்படலாம். பொதுவான மூன்றாம் தரப்பு மூலங்களின் பட்டியலைப் பார்க்க, எங்கள் கூட்டாளர்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


கீச்சுகளை நீக்குதல்

 

விசைப்பலகைக் குறுக்குவழிகள் 

 

twitter.com -இல் பயன்படுத்த வேண்டிய விசைப்பலகைக் குறுக்குவழிகளின் பட்டியல் பின்வருமாறு.
 

செயல்கள்

  • n  =  புதிய கீச்சு
  • l  =  விருப்பம்
  • r  =  பதில்
  • n  =  மறுகீச்சு
  • m  =  நேரடிச்செய்திகள்
  • u  =  கணக்கைச் செயல்மறை
  • b  =  கணக்கைத் தடைசெய்
  • enter  =  கீச்சு விவரங்களைத் திற
  • o   =  புகைப்படத்தை விரி
  • /  =  தேடு
  • cmd-enter | ctrl-enter  =  கீச்சை அனுப்பு
     

வழிசெலுத்தல்

  • ?  =  முழு விசைப்பலகை மெனு
  • j  =  அடுத்து கீச்சு
  • k  =  முந்தைய கீச்சு
  • space  =  பக்கம் கீழே
  • .  =  புதிய கீச்சுகளை ஏற்று
     

காலவரிசைகள்
 

  • g மற்றும் h  =  முகப்புக் காலவரிசை
  • g மற்றும் o  =  தருணங்கள்
  • g மற்றும் n  =  அறிவிப்புகள் தாவல்
  • g மற்றும் r  =  குறிப்பீடுகள்
  • g மற்றும் p  =  சுயவிவரம் 
  • g மற்றும் l  =  விருப்பங்கள் தாவல்
  • g மற்றும் i  =  பட்டியல்கள் தாவல்
  • g மற்றும் m  =  நேரடிச்செய்திகள்
  • g மற்றும் s  =  அமைப்புகள் மற்றும் தனியுரிமை
  • g மற்றும் u  =  ஒருவரின் சுயவிவரத்திற்குச் செல்

இந்தக் கட்டுரையைப் பகிர்க