அறிவிப்புகள்காலவரிசை என்பது X-இல் உள்ள பிறர் உங்களுடன் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதை நீங்கள் எளிதாகப் பார்க்கக்கூடிய வழியை வழங்குகிறது.
அறிவிப்புகள் காலவரிசையில், உங்கள் கீச்சுகளில் விருப்பம் தொரிவிக்கப்பட்டுள்ளவை, சமீபத்திய மறுகீச்சுகள் (உங்கள் கீச்சுகளில்), உங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட கீச்சுகள் (பதில்கள் மற்றும் குறிப்பீடுகள்), உங்களுடைய புதிய பின்தொடர்பவர்கள் பட்டியல், அத்துடன் உங்களுடைய புதிய கணக்கு பின்தொடர்பவர்கள் ஆகியவற்றை நீங்கள் காணலாம்.
உங்கள் அறிவிப்புகளை மூன்று வழிகளில் பார்க்கலாம்: பின்தொடர்பவர்கள், மறுகீச்சுகள், குறிப்பீடுகள் மற்றும் விருப்பங்கள் போன்ற கணக்குச் செயல்பாட்டிற்கான அறிவிப்புகளை, அனைத்தும் என்பது காட்டுகிறது. குறிப்பீடுகள் என்பது உங்கள் பயனர்பெயரை குறிப்பிடும் கீச்சுகளுக்கான அறிவிப்புகளை மட்டுமே உங்களுக்குக் காட்டுகிறது, சரிபார்க்கப்பட்டது என்பது சரிபார்க்கப்பட்ட நீல நிறச் சரிபார்ப்புக் குறிகளைக் கொண்ட கணக்குகளின் கீச்சுகளுக்கான அறிவிப்புகளை மட்டுமே உங்களுக்குக் காட்டுகிறது.
உங்கள் அறிவிப்புகளுடன் கூடுதலாக, உங்களுக்கு மிகவும் விருப்பமுள்ளதாகத் தோன்றும் உள்ளடக்கம் மற்றும் பொருத்தமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான உள்ளடக்கம் போன்ற அர்த்தமுள்ள உரையாடல்களின் பங்களிப்புகள் ஆகியவற்றையும் காட்டுவோம்.
நான் பெறக்கூடிய அறிவிப்புகளை வடிகட்ட முடியுமா?
ஆம். நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் மற்றும் X-இல் யாருடன் உரையாடலாம் என்பதை உங்களால் வடிகட்ட முடியும். நீங்கள் பெறக்கூடிய அறிவிப்புகளை வடிகட்டுவதற்கு, அறிவிப்புகள் அமைப்புகளில் மூன்று விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன: தர வடிகட்டி, செயல்மறைக்கப்பட்ட சொற்கள் மற்றும் மேம்பட்ட வடிகட்டிகள்.
தர வடிகட்டியை நீங்கள் ஆன் செய்யும் போது, உங்கள் அறிவிப்புகளிலிருந்து குறைந்த தரமுடைய உள்ளடக்கத்தை வடிகட்டுகிறது, எடுத்துக்காட்டாக, நகல் கீச்சுகள் அல்லது தானாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கமாகத் தோன்றுபவை – நீங்கள் பின்தொடரும் நபர்களிடமிருந்து அல்லது நீங்கள் சமீபத்தில் ஊடாடிய கணக்கிலிருந்து பெறும் அறிவிப்புகளை இது வடிகட்டாது. உங்கள் அறிவிப்புகள் அமைப்புகளில் இதனை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. (வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)
செயல்மறைக்கப்பட்ட சொற்கள் என்பதன் மூலம், உங்கள் அறிவிப்புகளில் நீங்கள் பார்க்க விரும்பாத குறிப்பிட்ட சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்காக அறிவிப்புகளைச் செயல்மறைக்கவும். இங்கே மேலும் அறிக. நீங்கள் அறிவிப்புகளைப் பார்க்க விரும்பாத கணக்குகளுக்கான அறிவிப்புகளைச் செயல்மறைக்கவும். நீங்கள் பின்தொடரும் அல்லது தெரியாத கணக்குகளைச் செயல்மறைப்பதும் இதில் அடங்கும். நீங்கள் பின்தொடரும் செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்கு, செயல்மறைக்கப்பட்ட கணக்கின் பதில்களும் குறிப்பீடுகளும் இன்னமும் உங்கள் அறிவிப்புகள் தாவலில் தோன்றும். இங்கே மேலும் அறிக.
மேம்பட்ட வடிகட்டிகள் நீங்கள் தவிர்க்க விரும்பும் குறிப்பிட்ட கணக்கு வகைகளிலிருந்து பெறும் அறிவிப்புகளை முடக்க அனுமதிக்கிறது. கூடுதலாக, உங்கள் கணக்கு திடீரென அதிகமான கவனத்தைப் பெறுகிறது எனில், உங்கள் அறிவிப்புகள் தாவலில், நீங்கள் பார்க்க விரும்புபவற்றிற்குக் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் இந்த வடிகட்டிகளைச் சரிசெய்யுமாறு ஒரு அறிவிப்பு சேர்க்கப்படலாம். (கீழே இந்த அமைப்புகள் பற்றி மேலும் அறியவும்.)
குறிப்பு: நீங்கள் X-இன் புதிய பயனர் என்றால் அல்லது பயன்பாட்டை மீண்டும் நிறுவியிருந்தால், தர வடிகட்டியின் அமைப்பு இயல்புநிலையாக அமைக்கப்படும். முடக்குதல் மற்றும் செயல்படுத்தலுக்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
IOS -க்கு:
படி 1
உங்கள் அறிவிப்புகள் காலவரிசைக்கு செல்லவும்
படி 2
கியர் ஐகானை தொடவும்
படி 3
தர வடிகட்டியை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு அதற்கு அடுத்துள்ள ஸ்லைடரை இழுக்கவும்.
குறிப்பு: மேல் மெனுவிலிருந்தும் அறிவிப்புகள் அமைப்புகளை அணுகலாம். உங்கள் சுயவிவரம் ஐகானைத் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தொடவும்.
Android -க்கு:
படி 1
உங்கள் அறிவிப்புகள் காலவரிசைக்கு செல்லவும்
படி 2
கியர் ஐகானை தொடவும்
படி 3
தர வடிகட்டியை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு அதற்கு அடுத்துள்ள பெட்டியை டிக் செய்யவும்.
குறிப்பு: வழிசெலுத்தல் மெனு ஐகான் அல்லது உங்கள் சுயவிவரம் ஐகான் மூலமாகவும் உங்கள் அறிவிப்புகள் அமைப்புகளை நீங்கள் அணுகலாம். உங்களுக்குக் கிடைக்கும் எந்த ஐகானையும் தொட்டு, அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
டெஸ்க்டாப்புக்கு:
படி 1
அறிவிப்புகள் காலவரிசைக்குச் செல்லவும்.
படி 2
உங்கள் அறிவிப்புகளை வடிகட்ட, அமைப்புகள் என்பதில் கிளிக் செய்யவும்.
படி 3
தர வடிகட்டியை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு அதற்கு அடுத்துள்ள பெட்டியை கிளிக் செய்யவும்.
மேம்பட்ட வடிகட்டி அமைப்புகள்
நீங்கள் தவிர்க்க விரும்பும் குறிப்பிட்ட கணக்குகளிலிருந்து அறிவிப்புகளைப் பெறலாம். தர வடிகட்டியைச் செயல்படுத்துவதுடன் கூடுதலாக, பின்வரும் கணக்குகளிலிருந்து பெறும் அறிவிப்புகளையும் முடக்கலாம்:
உங்கள் அறிவிப்புகளை வடிகட்ட, அமைப்புகள் என்பதில் கிளிக் செய்யவும்.
மேம்பட்ட வடிகட்டி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பும் வடிகட்டி(களை) ஆன் செய்வதற்கு, அதற்கு அருகிலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
iOS -க்கான X -ஐப் பயன்படுத்தி வடிகட்டிகளை அமைப்பதற்கு:
உங்கள் அறிவிப்புகள் காலவரிசைக்கு செல்லவும்
கியர் ஐகானில் தொடவும்
மேம்பட்ட வடிகட்டிகள் என்பதைத் தொடவும்.
நீங்கள் விரும்பும் வடிகட்டி(களை) ஆன் செய்வதற்கு, அதற்கு அருகிலுள்ள ஸ்லைடரை இழுக்கவும்.
Android -க்கான X-ஐப் பயன்படுத்தி வடிகட்டிகளை அமைப்பதற்கு:
உங்கள் அறிவிப்புகள் காலவரிசைக்கு செல்லவும்
கியர் ஐகானில் தொடவும்
மேம்பட்ட வடிகட்டிகள் என்பதைத் தொடவும்.
நீங்கள் விரும்பும் வடிகட்டி(களை) ஆன் செய்வதற்கு, அதற்கு அருகிலுள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தக் கட்டுரையைப் பகிர்க
Did someone say … cookies?
X and its partners use cookies to provide you with a better, safer and
faster service and to support our business. Some cookies are necessary to use
our services, improve our services, and make sure they work properly.
Show more about your choices.